செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பழைய பெருங்களத்தூர் பேரூராட்சி தெருவில் அறிஞர் அண்ணா சமத்துவ நலக்கூடம் ஒன்று உள்ளது. இந்த நலக்கூடம் கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் சிதலமடைந்து உள்ளது. இதனால் ஏழை மக்கள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் சமத்துவ நலக்கூடத்தில் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் சமத்துவ நலக்கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
.