நெல்லை- சேரன்மாதேவி மெயின் ரோட்டில் புதுப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக இரவில் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.