அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஒன்றியம், கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழநத்தம் காலனி தெருவுக்கென்று உள்ள இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்லும் அமரர் ஊர்தி வண்டி கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.