காற்று ஒலிப்பான்களால் அவதி

Update: 2024-01-07 17:32 GMT

ஈரோடு கரூர் ரோட்டில் செல்லும் அனைத்து பஸ்களும் ஒலி மாசு ஏற்படுத்தும் காற்று ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்து அதிவேகமாக செல்கின்றன. பரிசல் துறை நால் ரோடு பகுதியில் இருந்து தற்போது புதிய பஸ் நிலையம் இருக்கும் இடம் வரையில் வேகத்தடை இல்லை. இதனால் கட்டுங்கடங்காத வேகத்தில் தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை ஒலித்தபடி செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்