புதர்மண்டி கிடக்கும் ரெயில் நிலையம்

Update: 2024-01-07 15:37 GMT
கடலூர் அருகே உள்ள கேப்பர் குவாரி ரெயில் நிலைய நடைபாதை புதர்மண்டி கிடக்கிறது. இதில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், ரெயில் நிலையத்திற்கு வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் குடிநீர், மேற்கூரை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. அதனால் நடைபாதையில் உள்ள செடிகொடிகளை அகற்றுவதோடு, ரெயில் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க, ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி