விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் படந்தால் விலக்கில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே விபரீதங்கள் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?