பொதுவெளியில் மது அருந்தும் மதுப்பிரியர்கள்

Update: 2024-01-07 14:08 GMT

அரியலூர் பழைய பஸ் நிலையம் அருகே அரசு அனுமதிபெற்ற டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் மதுக்கூடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கு வந்து மது வாங்கும் மதுப்பிரியர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தாமல் சாலையோரம் அமர்ந்து மது அருந்துகின்றனர். இரவு நேரங்களில் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் சாலையோரம் அமர்ந்து மது அருந்துவதால், பெண்களும், குழந்தைகளும் இந்த சாலை வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மதுப்பிரியர்கள் பொதுவெளியில் அமர்ந்து மது அருந்துவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்