நோயாளிகள் அவதி

Update: 2024-01-07 14:00 GMT

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு தினமும் ஏராளமான நேயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் சிறுநீரக, மூளை நரம்பியல், இருதயம், பிளாஸ்டிக் சர்ஜரி, டயாலிசிஸ் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வாரம் ஒருமுறை புற்றுநோய் டாக்டர் வருகை தந்தார். அவரும் தற்போது வரவில்லை. மேலும் மார்பக புற்றுநோயை கண்டு பிடிக்கும் மெமோகிராம் இருந்தும் அதை இயக்கும் டாக்டர்கள் இல்லை. சி.எஸ். கருவி இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்