வடலூர்-சேத்தியாத்தோப்பு ரோட்டில் உள்ள மருவாய் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வயதானவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.
