மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீயில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. காலை மற்றும் இரவிலும் மதுவிற்க அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், பின்பும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மதுபிரியர்கள் நினைத்த நேரத்தில் மது கிடைப்பதால் அதிக விலை கொடுத்தும் குடிப்பதற்கு மதுபான கடை அருகே படையெடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் காலையில் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் மதுக்கடையை பார்த்த பின்பு மது அருந்திவிட்டு வேலைக்கு செல்வதில்லை. இதனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும்,இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு மதுவிற்பனை நடைபெறுவதால் கூலி வேலைக்கு சென்று விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு செல்லும் பெண்கள், திருப்பைஞ்சீலி கடைவீதியில் மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலரும் சென்று வரும் வழியில் மதுஅருந்திவிட்டு அரைகுறை ஆடையயோடு, ஆபாச வார்த்தைகளை பேசி, அலங்கோலமாக கிடக்கும் மதிப்பிரியர்களை கடந்துதான் வீட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.