செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம், காயரம்பேடு செல்லும் சாலை அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனத்தை நிறுத்தி வைக்கின்றனர். குறிப்பாக, காயரம்பேடு கூட்டுசாலை பகுதியில் பள்ளி இருப்பதால் அந்த பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால், மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அவதியடைந்து சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் சில சமயம் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் அருகில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.