நல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலசை கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த வளாகம் தற்போது பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து குளியலறை, கழிப்பறை வசதியுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.