கரூர் மாவட்டம், சேமங்கி பெரியார் நகரில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது .இதில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர் .பெரியார் நகர் பகுதி மிகவும் குறுகிய பகுதியாக இருப்பதால் அதிக அளவு வீடுகள் மட்டுமே உள்ளது. இதனால் பெரியார் நகர் பகுதிக்கு எதிர்ப்புறம் உள்ள புறம்போக்கு நிலத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சுகாதார வளாகம் பழுது அடைந்து கீழே விழுந்து விட்டது. இதன் காரணமாக பெண்கள் உடல் உபாதைகளை கழிக்க சிரமப்பட்டு வருகின்றனர். பின்னர் காகித ஆலை சார்பில் புதிய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பாதியிலே நிறுத்தப்பட்டது. எனவே சுகாதார வளாகத்தை உடனடியாக முழுவதும் கட்டி முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.