செங்கல்பட்டு மாவட்டம், திரிசூலம் ரெயில் நிலைய சுரங்கப்பாதையில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுரங்கப்பாதையில் உள்ள மின்விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.