பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-12-24 12:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை, சித்தாலபாக்கம் செந்தமிழ் நகரின் 2-வது தெருவில் உள்ள மண் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சிறிது மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும், அருகில் பள்ளி இருப்பதால் இந்த பகுதி வழியாக செல்லும் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி