அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயநல்லூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முறையான மயான கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் உடலை திறந்த வெளியில் வைத்து தகனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் மழைபெய்யும்போது இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.