அரியலூர் மாவட்டம் தவுத்தான்குளம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சாலையோரம் உள்ள புளியமரமானது இலைகள் எல்லாம் உதிர்ந்து பட்டுப்போய் காட்சியளிக்கிறது. இதனால் மரத்தின் கிளைகள் முறிந்து விழவும், விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.