அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் இப்பகுதி மக்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.