தூர்வாரப்படாத ஏரி

Update: 2023-12-03 11:46 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து உடையார்பாளையம் செல்லும் வழியில் பாளையத்தார் ஏரி உள்ளது. இந்த ஏரியானது தூர்வாரப்படாமல் தூர்ந்து வருகிறது. இதனால் மழைபெய்யும்போது இந்த ஏரியில் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ஏரியை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்