குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பூவாணிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது தெற்கு பூவாணிக்குப்பம் கிராமம். இந்த கிராமத்திலிருந்து நியூதானூர் வாய்க்கால் பாலத்தை கடந்து தான், கடலூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல முடியும். ஆனால், இந்த பாலம் பலத்த சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தொிகிறது. இதனால் பாலம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எந்நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?