செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஆத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எதிரில் இருந்த சுற்று சுவரை நெடுஞ்சாலை துறை அகலப்படுத்தும் பணிக்காக இடித்தனர். பின்னர், இடிக்கப்பட்டு அந்த சிமென்ட் கழிவுகளை பள்ளியின் மைதானம் அருகில் கொட்டிவைத்தனர். இதனால், தற்போது பள்ளி மைதானம் முழுவதும் சிமென்ட் கழிவுகள் கிடப்பதால் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிகளில் உள்ள சிமென்ட் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.