செங்கல்பட்டு மாவட்டம், வேதாசல நகரில் ஏராளமாக தெரு நாய்கள் சாலைகளில் சுற்றி திரிகிறது. மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிமக்களை துரத்துகிறது. இதனால் அந்த பகுதியில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.