ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள அம்புஜவல்லிபேட்டை காலனி தெருவில் கால்வாய் அமைக்கும் பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அங்கு நடந்து கூட செல்லமுடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.