கடலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறார். இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநகர மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.