ஆபத்தான நிழற்கூடத்தை அகற்ற வேண்டும்

Update: 2023-10-29 11:10 GMT
திருச்செந்தூர் அருகே காயாமொழி தெற்கு தெரு மெயின் ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது அங்கு டவுன் பஸ்கள் உள்ளிட்ட எந்த பஸ்களும் நிற்காததால், பயணிகள் நிழற்கூடம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்