செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், நரசிங்கபுரம் காலனியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவா்களை கடிக்கின்றன. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கிழே விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.