செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஆப்பூர் வழியே செல்லும் முதன்மை சாலையின் அருகில் உள்ள நடைப்பாதை சாலையின் இருபுறமும் முள்மரங்கள் மற்றும் செடி, கொடியாக உள்ளது. இது வளர்ந்து பாதி சாலையை மறைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து ஏதெனும் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.