குறிஞ்சிப்பாடி பஸ்நிலையம் அருகே கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், பணி தொடங்கி பல மாதங்கள் ஆகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால் சுகதாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மந்தகதியில் நடைபெற்று வரும் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.