தர்மபுரி நகரை ஒட்டி உள்ள சோகத்தூர் ஏரியில் மழைக்காலங்களில் கணிசமான அளவில் மழை நீர் தேங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பில் பெரும் பகுதியில் கருவேல முள் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஏரியில் மழை நீர் தேங்கும் பரப்பு கணிசமாக குறைந்து உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஏரியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.