ஆபத்தான குழி

Update: 2023-10-08 15:21 GMT
ஆபத்தான குழி
  • whatsapp icon

அந்தியூர் சத்தி ரோட்டில் சாக்கடை வடிகால் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் இன்னும் வடிகால் கட்டப்படாமல் குழி திறந்த நிலையிலேயே கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறி குழிக்குள் விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்ல முடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வடிகாலை விரைந்து கட்டி ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்