விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மல்லிகிட்டங்கி தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என அனைவரும் நாய்களின் தொல்லையால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
