வடலூர் அருகே உள்ள கண்ணுத்தோப்பு பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் பாலம் மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்து ஏற்படும் முன் பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதியதாக கட்டித்தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.