கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் இருந்து ஆல்பேட்டை வரை கால்வாய் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.