கிள்ளை பேரூராட்சி 11-வது வார்டு மயானப்பகுதியில் உள்ள எரியூட்டும் கொட்டகையின் மேற்கூரை பலத்த சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரையின் ஒரு பகுதி முற்றிலும் இல்லாமல் காணப்படுகிறது. எனவே சேதமடைந்த மேற்கூரையை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.