‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2023-09-27 16:50 GMT

பங்களாப்புதூர் கால்நடை ஆஸ்பத்திரி அருகே உள்ள நால்ரோடு சந்திப்பில் குடிநீர் குழாயில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி “தினத்தந்தி” புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழாய் உடைப்பை சரிசெய்து ரோடு சீரமைக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்