கடலூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்போது சரியாக பராமரிக்காமல் உள்ளதால், கட்டிடத்தில் செடி-கொடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் கட்டிடம் அதன் உறுதித்தன்மையை இழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே செடி, கொடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.