குறிஞ்சிப்பாடி மேற்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் பன்றிகள் புரண்டு எழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.