உளுந்தூர்பேட்டை அருகே பிடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழற்குடை கடந்த 3 ஆண்டுகளாக பலத்த சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நிழற்குடையை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்கின்றனர்.