அந்தியூர் தாலுகாவில் பிரம்மதேசம் ஊராட்சியில் உள்ள செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதனை பராமரிக்காததால் தொட்டியின் தூணில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. இதனால் தொட்டி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதற்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?