கொசுத்தொல்லை

Update: 2023-05-17 11:05 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலை ஓரத்தில் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்கால் செய்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரத்தில் மக்களை தூங்க விடாமல் கடித்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் அருகே கோழி கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்படுவதினால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்