திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் வாய்க்காலானது திருச்செந்தூர் நகர்ப்பகுதி வழியாக ஜீவாநகர் கடலில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் வழிநெடுகிலும் கழிவுநீர் நேரடியாக கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.