உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு கடிப்பதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே உளுந்தூர்பேட்டை பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.