வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கணியம்பாடி கிராமத்தில் காலியாக உள்ள இடங்களில் முட்புதர்கள் வளர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டைபூட்டிக்கொண்டு உள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கொசு மருந்து அடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.