ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா மோசூர், அம்பரீஷபுரம் ஆகிய கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தப் பகுதிகளில் கால்நடை மருந்தகம் இல்லாத காரணத்தால், நோய் தொற்று ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் மோசூர், அம்பரீஷபுரம் கிராமங்களில் இலவச கால்நடை மருத்துவ முகாமை அமைத்து, மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.
- ராமநாதன், மோசூர்.