ஜோலார்பேட்டை ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சி களளூர் கிராமத்தில் உள்ள மேலகுட்டை ஏரியில் இரவு பகல் என 24 மணி நேரமும் டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் ஆகியவற்றில் பொக்லைன் எந்திரம் உதவியோடு ஏரிமண் எடுத்து கடத்தப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரி மண் கடத்துவதை தடுப்பார்களா?
-மாதேஷ், மூக்கனூர்.