காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரியின் மதகு வழியாக கால்வாயில் பயிர் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். அவ்வாறு தண்ணீர் வர 8 கால்வாய்கள் உள்ளன. அந்த ஏரிக்கால்வாய்கள் தூர்ந்து போய் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. அந்தக் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், புதுப்பட்டு.