வாகன நுழைவு கட்டண அனுமதிச்சீட்டில் முறைகேடுகள்

Update: 2025-12-07 11:53 GMT

சோளிங்கர் மலைகளில் உள்ள நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு கார்த்திகை மாத திருவிழாவையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மலையடிவாரத்தில் தக்கான்குளம் அருகில் வாகன நுழைவு கட்டணம் என்ற பெயரில் போலி ரசீதுகள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுன்றன. வாகன நுழைவு கட்டணம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜானகிராமன், சோளிங்கர். 

மேலும் செய்திகள்