திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சமீப நாட்களாக தினமும் ஏராளமான பக்தர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் சென்ற வகையில் உள்ளனர். இதில் பெரும்பாலும் வெளிமாநிலங்களை சார்ந்த பக்தர்களை கிரிவலம் வருகின்றனர். கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார வளாகங்கள் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மூடி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரும் பக்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கிரிவலப் பாதையில் உள்ள சுகாதார வளாகங்களை தினமும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.