காட்பாடி வீ.ஜி.ராவ் நகர் பகுதியில் வடக்கு, தெற்கு 2-வது வீதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் சண்டையிட்டு இரவில் ஓலமிடுவதால் மக்கள் தூக்கம் கெடுகிறது. நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன. நாய்கள் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.கி.மனோகரன், காட்பாடி.