கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்

Update: 2025-11-02 17:30 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வேலை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான நாய்கள் கடந்த சில நாட்களாகச் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும்போது அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

-கண்ணன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்